கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் எஸ். விஜய் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார். இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் படத்தை தயாரித்துள்ளார்.
மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் முதல் பாடலான ‘ரிப்பிப்பீ வெளியாகி வைரலானது. மேலும் பிரவீன் எஸ் விஜய் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடித்த “சத்தியவான் சாவித்திரி” படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் ‘சத்யவான் சாவித்திரி’ படத்தின் 3வது பாடலான ‘கூடிங்கே’ வெளியாகி உள்ளது. உமாதேவி குப்பன் வரிகளுக்கு, சைந்தவி குரல் கொடுத்துள்ளார். ‘சத்யவான் சாவித்திரி’ படம் வருகிற நவம்பர் மாதம் 20-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.




