நாளை ‘இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டம்: மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

’இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்ல உள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு…

’இந்தியா’ கூட்டணியின் 3-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை மும்பை செல்ல உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக  ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் ஜூன் 24-ம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து  இரண்டாவது ஆலோசனை கூட்டம் ஜூலை 17 மற்றும் 18 தேதிகளில் பெங்களூரூவில் நடைபெற்றது.

மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியை எதிா்கொள்வதற்காக, காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 26 எதிா்க்கட்சிகள் ஒருங்கிணைந்து, ‘இந்தியா’ என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் மூன்றாவது கூட்டம் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெறவுள்ளது. பாஜகவுக்கு இக்கூட்டணி கடும் போட்டியை அளிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.இந்நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மும்பையில் நடைபெறவுள்ள ‘இந்தியா கூட்டணி’ கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சருடன் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செல்லவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் பாட்னா மற்றும் பெங்களூரில் நடைபெற்ற ‘இந்தியா கூட்டணி’ கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். இதைத் தொடா்ந்து, மும்பையில் நடைபெறும் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.