அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று நாடு திருமபிய பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜா்பைஜானில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். உலகின் நம்பா் 1 வீரரான நார்வே நாட்டை சேர்ந்த கார்ல்சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா இன்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு கூடுதல் தலைமை செயலர் அதுல்யா மிஸ்ரா, உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
மேலும் அவர் பயின்ற வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வீரர்களும் பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக குரல் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
பொய்க்கால் குதிரை, கரகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. உலக ரேபிட் செஸ் டீம் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற WR செஸ் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை வந்தடைந்த சதுரங்க நாயகன்…#Chennai | #Praggnanandhaa | #Pragyan | #ChessWorldCup | #chessworldcup2023 | #Chess | #Praggnandhaa | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/Wu6Xx52r8t
— News7 Tamil (@news7tamil) August 30, 2023







