‘தவறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்’ – ‘திரு.மாணிக்கம்’ திரைப்படத்தின் டீசர் வெளியானது!

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் திரு.மாணிக்கம். இப்படத்திற்கு ‘சீதா ராமம்’…

நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, பாரதிராஜா என பல பிரபலங்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் திரு.மாணிக்கம். இப்படத்திற்கு ‘சீதா ராமம்’ புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக ‘நாடோடிகள்’ பட கதாநாயகியாக அறிமுகமான அனன்யா நடித்துள்ளார். மேலும் நாசர், தம்பி ராமையா, இளவரசு என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படம் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த படம் இன்னும் ஒருசில வாரங்களில் திரைக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.