விர்ஜின் குரூப்பின் ரிச்சர்ட் பிரான்சனும் அமேசானின் ஜெஃப் பெஸோஸும்
தொடங்கி வைத்திருக்கிறார்கள், காஸ்ட்லியான விண்வெளியை சுற்றுலாவை.
இந்த சுற்றுலாவுக்காக, பிரான்சன் நிறுவனத்தில் முன் பதிவு செய்து
காத்திருக்கிறார்கள், ஐநூறுக்கும் மேற்பட்டோர்.
பிரான்சனின் யூனிட்டி ராக்கெட், புவியிலிருந்து 86 கிமீ உயரம் வரை பறந்து
சென்றது. அதை இன்னும் கொஞ்சம் தாண்டி 106 கி.மீ வரை சென்றிருக்கிறது
ஜெஃப்பின் புளு ஆரிஜின்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள், விண்வெளியில் செலவழித்தது மொத்த 4 நிமிடங்கள்தான். பூமியின்
வளிமண்ட லத்திற்கும் விண்வெளிக்கும் இடையே அங்கீகரிக்கப்பட்ட எல்லையை
குறிக்கும் கார்மன் கோட்டிற்கு மேல் அவர்கள் செலவழித்த அந்த நான்கு
நிமிடமும் எடையற்ற தன்மையை உணர்ந்திருக்கிறார்கள்.
அடுத்து எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது. இதற்கிடையே, இந்த விண்வெளி சுற்றுலாவால், வளிமண்டலம் மாசுக்களால் சிக்கலைச் சந்திக்கும் என்கிறார்கள், விஞ்ஞானிகள்.
ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் குழு வருடத்துக்கு 400 முறை விண்வெளிக்கு சுற்றுலா செல்ல இருப்பதாக அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனமும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இன்னும் இந்த எண்ணிக்கையை அறிவிக்கவில்லை. அறிவித்தால், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது ராக்கெட்டுகள்
விண்ணுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது.
விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகள் விமானங்களை விட நூறு சதவிகிதம் அதிகமாக, கார்பன் டை ஆக்சைடையும், அதிகமான நைட்ரஜன் ஆக்சைடையும் வெளியேற்றுவதால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள ஓசோன் படலத்தை இன்னும்
பாதிப்படைய செய்யும் என்றும் மழை மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.