‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.  தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில்…

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. 

தனுஷின் 50-வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், புத்தாண்டை முன்னிட்டு வெளியான புதிய போஸ்டர் ஆகியவை நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதனையடுத்து வெளியான அடங்காத அசுரன்தான் பாடலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வாட்டர் பாக்கெட்’ பாடலை ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இப்பாடலை சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். வரிகளை கானா காதர் எழுதியுள்ளார். தற்போது இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.