இயக்குநர் மற்றும் நடிகரான சசிகுமார் “மை லார்ட்” என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே ஆச்சர் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயபிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தி ஈர்த்தது. மேலும் இப்படத்தின் “எச காத்தா” எனும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், மை லார்ட் படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது. “ராசாதி ராசா” என்னும் இப்பாடலுக்கு பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார். மேலும் பாடகர்கள் வி.எம். மகாலிங்கம் மற்றும் முத்து சிற்பி ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.
‘மை லார்ட்’ படத்தின் இரண்டாவது பாடல் உங்களுக்காக… நன்றி! 🔥❤️🔥 https://t.co/e8HfB0vm02@RSeanRoldan @SasikumarDir #Yugabarathi #Mahalingam #Muthusirpi @Olympiamovis @ambethkumarmla#ChaithraJAchar @gurusoms #NiravShah #sathyarajnatrajan #munipalraj #JayaPrakash #ashasarath… pic.twitter.com/wRVdVS2IbV
— Director Rajumurugan (@Dir_Rajumurugan) December 11, 2025







