மார்க் ஆண்டனி டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது : விஷால் நன்றி!

 மார்க் ஆண்டனி டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மகிழச்சி அளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன்,…

 மார்க் ஆண்டனி டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மகிழச்சி அளிப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் மார்க் ஆண்டனி. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் செப்டம்பர் 3ஆம் தேதி வெளியானது.23 மணி நேரத்தில் 1.6 கோடி பார்வையாளர்களை கடந்து யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இதுதொடர்பாக நடிகர் விஷால் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், செப்டம்பர் 15 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கிலும் செப்டம்பர் 22 ஆம் தேதி இந்தியிலும் வெளியாகும் திரைப்படத்தை நீங்கள் அனைவரும் விரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இப்போது டிரெய்லர் வெளியீட்டு விழாவிற்காக மும்பை செல்கிறேன், அங்கேயும் அதே வரவேற்பை எதிர்பார்க்கிறேன் என விஷால் கூறியுள்ளார்.

https://twitter.com/VishalKOfficial/status/1698665496176935214?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1698665496176935214%7Ctwgr%5E8712538e4432e55544d55a1aa5a01460e45205cc%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fpublish.twitter.com%2F%3Fquery%3Dhttps3A2F2Ftwitter.com2FVishalKOfficial2Fstatus2F1698665496176935214widget%3DTweet

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.