பல்லடம் அருகே நான்குபேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பல்லடம் அருகே நான்குபேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், தனது வீட்டருகே ஒருவர் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டுள்ளார்.…

பல்லடம் அருகே நான்குபேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவில் பிடிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், தனது வீட்டருகே ஒருவர் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம கும்பல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில் குமார், மோகன் குமார், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்குபேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் நான்குபேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில், கொலையாளிகளை துரிதமாகப் பிடிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கொலை செய்யப்பட்ட நான்குபேரின் குடும்பங்களுக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளதுடன், தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.