மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் அஜித் உடன் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, ஆரவ், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தத் திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
இப்படத்தின் முதல் பாடலான Sawadeeka (சவதீகா) சமீபத்தில் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்பாடல் யூடியூபில் 22 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்நிலையில், இந்த பாடலின் ரீலோடட் வெர்ஷன் வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. பாடகர் அந்தோனி தாசனும், இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இணைந்து ஆடி பாடி வைப் செய்யும் விடியோவாக உருவாக்கப்பட்டுள்ளது.







