’மை லார்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!

சசிக்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’மை லார்ட்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் மற்றும் நடிகரான சசிக்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மைலார்ட் . “ஜோக்கர், குக்கூ, ஜப்பான்” ஆகிய படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் குரு சோகசுந்தரம், கன்னட நடிகை சைத்ரா ஆச்சர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், மைலார்ட் திரைப்படமானது பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு  போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.