5வது மாடியிலிருந்து விழுந்த குழந்தையைக் காப்பாற்றிய ரியல் ஹீரோ!

சீனாவில், 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றியவரை அப்பகுதி மக்கள் ரியல் ஹீரோ எனப் பாராட்டி வருகின்றனர். சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Tongxiang என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டின் ஜன்னல்…

சீனாவில், 5வது மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தையைக் காப்பாற்றியவரை அப்பகுதி மக்கள் ரியல் ஹீரோ எனப் பாராட்டி வருகின்றனர்.

சீனாவின் Zhejiang மாகாணத்தில் உள்ள Tongxiang என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டின் ஜன்னல் வழியாக 2 வயது உடைய குழந்தை ஒன்றி தவறி கீழே விழுகிறது இதனைப் பார்த்த இருவர், ஓடிச் சென்று குழந்தையைப் பிடிக்க முயற்சி செய்கின்றனர். அப்போது, அவர் சென்ற வேகத்தில் கீழே விழப் பார்க்கிறார். ஆனாலும், அதனைச் சமாளித்த அவர், குழந்தையை லாவகமாகப் பிடித்து, குழந்தையைப் பத்திரமாக மீட்கிறார்.

அண்மைச் செய்தி: ‘இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தமிழ்ப் படங்களில் ஒன்றாக ‘தி லெஜண்ட்’

யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில், குழந்தையைப் பத்திரமாக மீட்ட அந்த காட்சி அங்குப் பொருத்தப்பட்டு இருந்த வீடியோ கேமீராவில், பதிவாகியுள்ளது. அந்த காட்சி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டதால், அந்த இளைஞரை ரியல் ஹீரோ எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.