மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த கேள்வி; பதிலளிக்காமல் மத்திய அமைச்சர் ஓட்டம்!…

மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்…

மல்யுத்த வீரர்களின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி ஓடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள மல்யுத்த வீராங்கனைகள், டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வீரர்களும் ஆதரவு தெரிவித்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் பாஜக எம்பி பிரஜ் பூஷன் சிங்கை கைது செய்ய கோரிய மல்யுத்த வீராங்களின் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், வேகமாக காரை நோக்கி ஓடினார்.

https://twitter.com/vibewidyou/status/1663610559189643269?s=20

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மத்திய அமைச்சரை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.