அமெரிக்க தோட்டக்கலை ஆசிரியர் ஒருவர் 2,749 பவுண்டுகள் (1,247 கிலோ) எடையுள்ள ராட்சத பூசணிக்காயை வளர்த்து, உலக சாதனை படைத்தார்.
அமெரிக்காவின் மினசோட்டாவை சேர்ந்த டிராவிஸ் ஜின்ஜர், கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பேயில் நடந்த 50வது உலக சாம்பியன்ஷிப் பூசணிக்காய் எடை போட்டி நடைபெற்றது. இதில் மிகப்பெரிய, ஆரஞ்சு பூசணிக்காயை விளைவித்து வென்றார். இந்த பூசணிக்காய்க்கு மைக்கேல் ஜோர்டானின் பெயரால் செல்லப்பெயர் சூட்டப்பட்டது
கின்னஸ் உலக சாதனைகளின்படி, 2021 ஆம் ஆண்டில் இத்தாலியில் 2,702 பவுண்டுகள் (1,226-கிலோ) பூசணிக்காயை வளர்த்த ஒரு விவசாயி, அதிக எடையுள்ள பூசணிக்காயின் உலக சாதனை படைத்தார்.
ஜின்ஜர் தனது வீட்டு முற்றத்தில் உள்ள பூசணிக்காய் வளர்க்கிறார். இந்த ஆண்டு தனது செடிகளுக்கு கூடுதல் பராமரிப்பு கொடுக்கவும், ஒரு நாளைக்கு 12 முறை தண்ணீர் பாய்ச்சவும், வழக்கத்தை விட சற்று அதிகமாக உரமிடவும் முடிவு செய்ததாக அவர் கூறினார்.
அனோகா தொழில்நுட்பக் கல்லூரியில் நிலப்பரப்பு மற்றும் தோட்டக்கலை ஆசிரியரான ஜின்ஜர், இளமை பருவத்திலிருந்தே பூசணிக்காயை வளர்த்து வருகிறார். அவருடைய தந்தையால் ஈர்க்கப்பட்டு அவற்றை வளர்த்தார். அவர் முதன்முதலில் 2020 இல் ஹாஃப் மூன் பேயின் வருடாந்திர எடைப் போட்டியில் பங்கேற்றார் மற்றும் கடைசி நான்கு மாபெரும் பூசணிக்காய் போட்டிகளில் மூன்றை வென்றுள்ளார்.







