தடுமாறி கீழே விழுந்தும் இலக்கை எட்டிப் பிடித்த காளைகள்-மெய் சிலிர்க்க வைத்த மாட்டுவண்டி பந்தயம்!

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை யில் நடைபெற்ற மாட்டுவண்டு பந்தயத்தில் தடுமாறி கிழே விழுந்தும் இலக்கை நோக்கி சென்ற காளையின் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன. சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்…

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை யில் நடைபெற்ற மாட்டுவண்டு பந்தயத்தில் தடுமாறி கிழே விழுந்தும் இலக்கை நோக்கி சென்ற காளையின் காட்சிகள் இணைய தளத்தில் வைரலாகி வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.16 பெரிய மாடுகள், 22 சின்ன மாடுகள் என மொத்தம் 38 இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட வண்டிகள் போட்டியில் பங்கேற்றன.

பெரிய மாடுகளுக்கு 7 சுற்றுகளும், சின்ன மாடுகளுக்கு 5 சுற்றுகளும் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியின் சின்ன மாட்டு வண்டி போட்டியின்போது தடுமாறி கிழே விழுந்த மாடு ஒன்று மீண்டும் அதே வேகத்துடன் எழுந்து இலக்கி நோக்கி சீறிச் சென்ற காட்சிகள் இணையதளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.