மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கும், சவரன் ரூ.57,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.7,145-க்கும், சவரன் ரூ.57,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வரை உயர்ந்து வந்த நிலையில், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதன் விலை குறைந்து கொண்டே வந்தது. கடந்த 1ம் தேதி ஒரு கிராம் ரூ.7,385-க்கும், ஒரு சவரன் ரூ.59,080-க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் விலை குறைந்து கொண்டே வந்து, கடந்த 17ம் தேதி ஒரு கிராம் ரூ.6,935-க்கும், ஒரு சவரன் ரூ.55, 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி முதல் மீண்டும் தங்கத்தின் விலை உயரத்தொடங்கியது.
அதன்படி, சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 7,115க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 56,920க்கு விற்பனையானது.

இதையும் படியுங்கள் : மகளிர் ஆசிய ஹாக்கி | கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகைகள் அறிவிப்பு!

இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 7,145க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.57,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 1,680 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.101 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.