அட்லீ இயக்கதில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியானது.
‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படம் வரும் செப்டம்பர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் பாலிவுட் படங்கள் வெற்றி பெறாத நிலையில், ‘ஜவான்’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘ஜவான்’ படத்தின் ட்ரெயிலரை டாம் க்ரூஸ் நடிப்பில் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்’ ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.










