நடிகரும் நடன இயக்குநருமான பிரபு தேவா மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு கூட்டணியில் வெளியான காதலன், மிஸ்டர் ரோமியோ, எங்கள் அண்ணா, மனதை திருடிவிட்டாய் உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
இந்த நிலையில் இருவரும் தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கின்றனர். சாம் ரோட்ரிக்ஸ் இயக்கியிருக்கும் இந்தப் படத்திற்கு ’பேங் பேங்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் ப்ரோமோவை எஸ்.ஜே. சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார்.
When the world ends… legends rise – It is time to enter the Z-Verse ❤️🔥
Extremely elated to present the title look of @KRGOffl ’s next big adventure. Things are about to go #BangBang !
A #PDxVV world begins.
Produced by @KRGOffl #KannanRavi…
— S J Suryah (@iam_SJSuryah) January 30, 2026







