மாமன்னன் திரைப்படத்தை பாராட்டிய மாமனிதர்கள்!

மாமன்னன் திரைப்படத்தை கண்ட இந்திய கம்யூனி.கட்சியினை சார்ந்த ஐயா நல்லக்கண்ணு, முதுபெரும் உறுப்பினர்கள் மற்றும் அற்புதம்மாள் இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசளித்துள்ளனர். இதனை உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த வாரம்…

மாமன்னன் திரைப்படத்தை கண்ட இந்திய கம்யூனி.கட்சியினை சார்ந்த ஐயா நல்லக்கண்ணு, முதுபெரும் உறுப்பினர்கள் மற்றும் அற்புதம்மாள் இயக்குநர் மாரிசெல்வராஜை பாராட்டி புத்தகம் ஒன்றை பரிசளித்துள்ளனர். இதனை உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த வாரம் பக்ரீத் வெளியீடாக ரிலீசான ‘மாமன்னன்’ படத்தில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்,. பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்தனர். இதில் இதுவரை பார்க்காத கோணத்தில் வடிவேலுவை திரையில் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இதுதான் அவருக்கான தரமான கம்பேக் என வடிவேலுவின் நடிப்புக்கு ஃபயர் விட்டு வருகின்றனர். அத்துடன் இந்தப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ படம் பலரின் பாராட்டுக்களை குவித்து வருகிறது. பலவித சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீசாகி தற்போது வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்தப்படம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் ‘மாமன்னன்’ படக்குழுவினரை பாராட்டி தள்ளி வருகின்றனர். இதனால் படக்குழுவினர் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ‘மாமன்னன்’ படத்தை பார்த்துள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த ஐயா நல்லக்கண்ணு, சி. மகேந்திரன், மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இயக்குனர் மாரி செல்வராஜை வாழ்த்தியுள்ளனர். அத்துடன் சி. மகேந்திரன் எழுதிய ‘ஒரு வண்ணத்துப்பூச்சியின் மரண சாசனம்’ என்ற புத்தகத்தை மாரி செல்வராஜுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். இதுக்குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமன்னனை விரும்பி வந்து பார்த்து வாழ்த்திய பெரும் மரியாதைக்குரிய தோழர்களுக்கு எங்கள் நன்றிகளும் பிரியமும்’ என பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.