ஓடிடி தளங்களுக்கு விதிமுறைகள் – மத்திய அரசு பரிந்துரை: விதியை மீறினால்…!

சில ஓடிடி தளங்களில் ஒழுங்குமுறைகளை சரிசெய்யவும் , விதிகளை மீறும் ஒடிடி தளங்களை தடைசெய்யவும் மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஓடிடிதளங்களில் ஒழுங்குமுறை பணிகளை சரிசெய்ய மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.…

சில ஓடிடி தளங்களில் ஒழுங்குமுறைகளை சரிசெய்யவும் , விதிகளை மீறும் ஒடிடி தளங்களை தடைசெய்யவும் மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஓடிடிதளங்களில் ஒழுங்குமுறை பணிகளை சரிசெய்ய மத்திய அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்  (ஜூலை 7) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த விவகாரம் தொடர்பாக பரிந்துரைகளை பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில், முன்னணியிலுள்ள சில ஓடிடி தளங்களையும் இணையதளங்களுக்கு நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்ட நேரங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பதில் உள்ள தொழில்நுட்ப சவால்கள் குறித்து கேட்கப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய சவால்களை சரிசெய்வதற்காக சாத்தியக்கூறுகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களைத் தவிர்த்து சில இணையதளங்களையும் தடை செய்வதற்கான தேவை உள்ளதா என பங்குதாரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் பல்வேறு வகுப்பு அல்லது பிரிவுகளில் விடியோக்கள் உள்ள நிலையில், எந்த வகுப்பில் உள்ள ஓடிடி தளங்கள் தடை செய்ய வேண்டிய வரையறைக்குக் கீழ் வருகிறது எனவும் ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுள்ளது.

மேலும், வாட்ஸ் ஆப், சிக்னல், மெசேஞ்சர் போன்ற உரிமம் பெற்ற செயலியின் வாயிலாகவும் ஓடிடி சேவையைக் கொண்டுவர உள்ளது.

பயனர்கள் பயன்பெறும் வகையிலும் ஓடிடி நிறுவன போட்டியாளர்கள் லாபம் ஈட்டும் வகையிலும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் ஓடிடி நிறுவனங்களைக் கொண்டுவர ஆணையம் விரும்புகிறது என அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.