ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
2022ஆம் ஆண்டுக்கான ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் பசல் நகரில் நடைபெற்றது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, தாய்லாந்தின் புசானன் ஆகியோர் மோதினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிவி சிந்து 21க்கு 16, 21க்கு 8 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். இதன் மூலம் பிவி சிந்து முதல்முறையாக ஸ்விஸ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதுவரை புசானனுடன் 17 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள சிந்து, நேற்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 போட்டிகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும், 2019ல் தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவிற்கு இது 2வது பட்டம் ஆகும்.