ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று இருந்தது. இதன் காரணமாக இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம், தமிழ்நாட்டில் இன்றும், நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் இன்றும், நாளையும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.







