Are you ready? – இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ள ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழா!

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில்…

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடலான ‘காவாலா’ பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாவது பாடலான ”ஹுக்கும்” எனப்பெயரிடப்பட்ட பாடல் வெளியானது.

’ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது பாடலான “ஜுஜுபி” பாடல்  அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் ஜெயிலர் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 10 முதல் முத்துவேல் பாண்டியனின் ஆவேசத்தைக் காண தயாராகுங்கள் என படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

https://twitter.com/sunpictures/status/1684799904349319168?s=20

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.