இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுறுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. 4-வது ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில் தொடரில் 3-1 என்ற கணக்கில் இந்திய அனி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆட உள்ளது.
அணி விவரம்
இந்தியா : சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன்(wk), ஷ்ரேயாஸ் ஐயர்(c), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் திர், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
நியூசிலாந்து : டிம் சீஃபர்ட்(wk), ஃபின் ஆலன், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், பெவோன் ஜேக்கப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சாண்ட்னர்(c), நாதன் ஸ்மித், ஆடம் மில்னே, ஜேக்கப் டஃபி, பிளேயர் டிக்னர்
தசைப்பிடிப்பு காராணமாக கடந்த இரண்டு போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் தற்போது குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




