30 C
Chennai
May 19, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

‘ஓய்வெடுக்க மறுத்துவிட்டார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா’ – மருத்துவர் பாபு மனோகர்

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று செயல்பட தொடங்கியது. முதல் நாள் விசாரணையில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
மருத்துவர் பாபு மனோகர் அளித்துள்ள வாக்குமூலத்தில், தொடர்ந்து இரண்டாவது முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்க இருந்த நாளுக்கு முன்னதாக, அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத நிலை ஆகிய பிரச்னைகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜெயலலிதாவின் மருத்துவ ஆலோசகரான மருத்துவர் சிவக்குமார் அழைத்ததின் பேரில், ஜெயலலிதா பதவியேற்புக்கு முந்தைய நாள், போயஸ் தோட்டத்திற்குச் சென்று ஜெயலலிதாவை சந்தித்ததாக பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்தி: உக்ரைன் – தற்காலிகமாக போரை நிறுத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் அறிவிப்பு

அப்போது, ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், சிறுதாவூர் அல்லது ஊட்டிக்குச் சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்ததாகவும் மருத்துவர் பாபு மனோகர் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா, ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாக அப்போலோ மருத்துவர் பாபு மனோகர், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading