ஒடிசா ரயில் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் 301 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 900பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இரண்டு ரயில் பாதைகளில் சீரமைப்பு பணி நிறைவடைந்ததால், இரு வழித் தடத்திலும் ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த 51 மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து சீரடைந்ததாகவும், ‘எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங்’ முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதுவே விபத்துக்கு காரணம். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்படுவார்கள் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
மீட்புப் பணிகள் அணைத்தும் முடிந்து ரயில் பாதை சீர்செய்யப்பட்டு ரயில் போக்குவரத்து தற்போது தொடங்கி வருகிறது. இன்னும் துயரத்தின் ஓலம் அடங்காத நிலையில் ஒடிசா ரயில் விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.
பயணிகளில் ஒருவரால் பிடிக்கப்பட்ட வீடியோவில், துப்புரவு பணியாளர் ஒருவர் ஏசி கோச்சின் தரையைத் துடைப்பதைக் காட்டுகிறது, மற்ற பயணிகள் தங்கள் தூங்குகிறார்கள் மற்றவர்கள் தங்கள் சக பயணிகளுடன் பேசிக்கொண்டு வருகின்றனர்.
Disturbing video of the train accident in Balasore, Odisha has emerged, capturing the incident inside an AC compartment pic.twitter.com/RTkdT5GpWa
— Pooja Singh (@poojasingggh) June 8, 2023
அப்போது திடீரென ரயில் குலுங்குகிறது. கேமரா ஆடுகிறது. கைகளிலிருந்து தொலைப்பேசி நழுவியதுடன், வீடியோவைப் படம்பிடித்த நபரை திடீரென இழுத்துச் சென்றதாகத் தெரிகிறது. அடுத்த சில வினாடிகளில் ஒட்டுமொத்த இடமும் இருளில் மூழ்கி விடுகிறது. பிறகு, எல்லா இடங்களிலும் அலறல் மற்றும் கூச்சலுடன் மொத்த இடமும் இருளில் மூழ்கிவிடுகிறது.