விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளிமன்ற உறுப்பினருமான திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த திருமாவளவனுக்கு பிறந்தநாள் அவாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, “தனது 28-ஆம் வயதில் கட்சி ஆரம்பித்து, 36 ஆண்டுகள் கட்சியை கட்டி காப்பாத்தி, தன்னுடைய கொள்கைகளையும், சித்தாந்தத்தையும், விட்டு கொடுக்காமல், ஒரு தொண்டனையும் இழக்காமல், ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வேண்டுமென்று ஓயாமல் போராடி, அதையும் சாதித்தவர் என்னுடைய அருமை நண்பர் திருமாவளவன்.
65-ஆவது வயதில் நுழையும் இந்த தருணத்தில் அவர் பெரும் பேறும் புகழும் பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து, மக்கள் சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




