புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரவியது
தொடர்பாக பீகார் மாநில ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வீடியோக்களை கொண்டு
திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் நடந்ததாக பீகாரைச் சேர்ந்த வட மாநில
தொழிலாளர்கள் ஏராளமானோர் அச்சமடைந்தனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனிடைய திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் அமைதி நிலை இருப்பதையும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் திருப்பூரில் நிகழவில்லை என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பின்னடை நிறுவனங்களில் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு தலைமையில் காவல்துறையினர் நேற்று நேரில் சென்று வட மாநில தொழிலாளர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சைபர் கிரைம் மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்து தவறான வீடியோக்கள் மூலம் வதந்தி பரப்பிய விவகாரம் தொடர்பாக பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு பணி படை காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் திருப்பூரில் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். கோவைக்கு விமானம் மூலம் வந்த அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பணி திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினவ், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாசங் சாய் மற்றும் திருப்பூர் ஏற்றுமதி அவர்கள் சங்கத்தினர்.
தொழில்துறையினர் தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வு கூட்டத்தில் திருப்பூரில் தங்கி பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து ஆய்வு குழுவினர் திருப்பூர் மாநகரில் உள்ள ஒரு சில நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை சந்தித்து பேச உள்ளனர்.







