வசூலை வாரிக் குவித்த ‘ஏலியன் – ரோமுலஸ்’ | #OTTRelease எப்போது?

’ஏலியன் : ரோமுலஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரைப்படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட்’ மற்றும் ‘டோண்ட் ப்ரீத்’…

The information about the OTD release of the movie 'Alien: Romulus' is out.

’ஏலியன் : ரோமுலஸ்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சயின்ஸ் பிக்சன் ஹாரர் திரைப்படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. இந்த படத்தினை ‘ஈவில் டெட்’ மற்றும் ‘டோண்ட் ப்ரீத்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய பெடே அல்வாரெஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தினை ரிட்லி ஸ்காட் தயாரித்துள்ளார். மேலும் கெய்லி ஸ்பேனி, இசபெலா மெர்சிட், ஸ்பைக் பியர்ன் மற்றும் ஐலீன் வு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் ஐமேக்ஸ் திரைகளில் கடந்த மாதம் 23ம் தேதி வெளியானது. மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இப்படம் ஏலியன் சம்பந்தமாக உருவாகி அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும், ஐமேக்ஸில் வெளியாகி அதிக வசூல் செய்த படமாக இருந்த ஏலியன்: காவ்னெண்ட்டின் சாதனையையும் முறியடித்து புதிய சாதனை படைத்திருந்தது.

இதையும் படியுங்கள் : அரிசி சாப்பிட்டு #Guinness உலக சாதனை படைத்த பெண்…இணையத்தில் வைரலாகும் வீடியோ!

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 13ம் தேதி முதல் பிரைம் வீடியோ மற்றும் ஆப்பிள் டிவியில் இப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.