தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
புதுச்சேரி வெளிச்சமாக உள்ளது. 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. அதுவும் சிலர் செய்த பிரச்னை காரணமாக தடைபட்டது. உடனே மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டம் வாபஸ் பெற பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
தனியார்மயமாக்கல் என்றதும் முழுவதுமாக கொடுத்துவிடுவதாக நினைத்து விட்டார்கள்.
பல துணை நிலை மாநிலங்களில் தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதனால் வேண்டிய அளவிற்கு மின் கட்டணம் குறைக்கப்படும்.24 மணி நேரமும் சிறப்பான செயல்பாடு இருக்கும். மின் ஊழியர்கள், அதிகாரிகள் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.
மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான் . மின் திருட்டு தடுக்கப்படுதால் சிலர் போராட்டங்களை தூண்டி இருக்கலாம். ஊழியர், அதிகாரிகள் பதவி உயர்வு பாதிக்கப்படாது.
கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது, பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காகதான். ஊழியர், அதிகாரிகளின் நடவடிக்கையால் புதுவை மாடல் இன்று உயர்ந்த மாடலாக இருக்க போகின்றது. மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும்.
சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை. ஆனாலும் உடனடியாக மின் பிரச்னை சரி செய்யப்பட்டது. ஊழியர்களின் போராட்டம் திரும்ப வருமா என இனிதான் பார்க்க வேண்டும் என்றார் தமிழிசை செளந்தரராஜன்.
இயக்குனர் வெற்றிமாறனுக்கு கமலஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு, “தஞ்சை பெரிய கோயிலை பார்த்து வளர்ந்தவள் நான். அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாசார அடையாளங்களை மறைப்பதை எல்லோரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்காக திருப்பி கொண்டால் ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவமும், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். அடையாளத்தினை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை முற்பட்டால் அது சரியாக இருக்காது” என தமிழிசை சௌந்தராஜன் பதிலளித்தார்.








