திருமணம் தாண்டிய உறவை அறிந்த கணவன் – மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற மனைவி!

உத்தரப்பிரதேசத்தில் தனது திருமணம் தாண்டிய உறவை கணவர் அறிந்ததை தொடர்ந்து,  மனைவி மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த்.  இவருக்கு…

உத்தரப்பிரதேசத்தில் தனது திருமணம் தாண்டிய உறவை கணவர் அறிந்ததை தொடர்ந்து,  மனைவி மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ராம் கோவிந்த்.  இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில், ராம் கோவிந்த்தின் மனைவி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் 7 வருடங்களாக திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது குறித்து,  ராம் கோவிந்திற்கு சமீபத்தில் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த பெண் தன் காதலனை அதே வீட்டில் தங்க வைக்கலாம் என தனது கணவரிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.  ஆனால் அதனை ராம் கோவிந்த் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  தொடர்ந்து அந்த பெண் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

அந்த பெண் முதலில் ரயில் தண்டவாளத்தில் நின்று தனது வாழ்க்கையை முடிக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அடுத்து, ஒரு கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து குதிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.  இவை அனைத்தும் தோல்வியடைந்ததால்,  அந்த பெண் கோர்காபூரில் உள்ள மின்கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

மின்கம்பத்தில் பெண் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  அந்த பெண் கம்பத்தில் இருந்து இறங்க மறுத்த நிலையில்,  ஒரு சிலர் அந்த பெண்ணை மின்கம்பத்தில் இருந்து வலுக்கட்டாயமாக கீழே இறக்கியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

https://twitter.com/ManojSh28986262/status/1775508391106097609?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1775508391106097609%7Ctwgr%5E06c2df23e46a9c99e902d6d29d981519c523552f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fup-woman-climbs-electric-pole-after-husband-discovers-her-extramarital-affair-video-101712215923099.html

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.