முக்கியச் செய்திகள் குற்றம்

வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவன்; விசாரணையில் வெளிவந்த பல உண்மைகள்

பெரம்பலூர் அருகே வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்ததை வீடியோ மற்றும் போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் அருகே கோனேரிப்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார் மகள் அகிலா (25). ஹோமியோபதி டாக்டர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இவருக்கு அதே ஊரை சேர்ந்த இளங்கோவன் மகன் விமல் (31) என்பவரும் கடந்த 2021ஆம்
ஆண்டு செப். 10ம்தேதி திருமணம் நடந்தது. விமல் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி அகிலாவை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், துன்புறுத்துவதோடு, அருவருக்கத்தக்க கொச்சை வார்த்தைகளால் அடிக்கடி திட்டி தாக்கி வந்துள்ளார்.

மேலும், 50 பவுன் நகையும், பணம் வரதட்சணையாக கொடுத்தால் தான் வாழ முடியும் என்று கூறி கொடுமைப்படுத்திய விமலுக்கு அவரது குடும்பத்தினர் அனைவரும்
உடந்தையாக இருந்த தோடு அவர்களும் திட்டி, தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.

மேலும் விமலின் செல்போனை எடுத்து பார்த்த பொழுது அதில் பல பெண்களுடன்
உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும் போட்டோ எடுத்து வைத்திருப்பது தெரிய
வந்தது. அதனை வைத்து அவர்களிடம் விமல் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது.


அதேபோல் மனைவி அகிலாவிடமும் உடலுறவு கொண்டதையும் போட்டோ மற்றும் வீடியோஎடுத்து வைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து அகிலா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் கணவர் விமல் மற்றும் அவரது மாமனார் இளங்கோவன், மாமியார் விஜயலட்சுமி, நாத்தனார் மீனா மற்றும் அவரது கணவர் சிவா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மனைவி மற்றும் பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த வீடியோ மற்றும்
போட்டோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய தோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த
விமலை போலீசார் கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி
பெரம்பலூர் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

பாராலிம்பிக்கில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்தியாவின் பாவினா படேல்

Halley Karthik

“காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றிபெறுமா என திமுகவிற்கு கவலை” – ப.சிதம்பரம் கருத்து

Gayathri Venkatesan

இந்தியாவின் முதல் தேசியக்கொடியை ஏற்றியவர் யார்?

Dinesh A