கொட்டி தீர்த்த அதிகனமழை | 2 ஆக பிளந்த நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை!

காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை இரண்டாகப் பிளந்துள்ளது.   குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி, …

காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை இரண்டாகப் பிளந்துள்ளது.  

குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.  இதனால் திருநெல்வேலி,  தூத்துக்குடி,  தென்காசி,  கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இதனால்  பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்கள் பலர் வெள்ள நீரில் சிக்கி தவிக்கின்றனர். மீட்பு குழுக்கள் அனைவரையும்  மீட்டு வருகிறது. பல மக்கள் தங்களை மீட்க கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,  திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டாகப் பிளந்துள்ளது.  கோரம்பள்ளம் குளத்துக்கு வந்த காட்டாற்று வெள்ளம் இந்த  சாலையை இரண்டாக உடைத்துள்ளது.  இதனால் தூத்துக்குடி மாநகரம் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.