“தி கிரே மேன்” பட வரிசயில் தனுஷுக்கு புதிய படம்

ரையான் கோஸ்லிங்-க்கு இணையான திறமைக்கொண்டவர் தனுஷ். எனவே எங்களுக்கு அவரை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விருப்பம் இல்லை – ருஸ்ஸோ பிரதர்ஸ் ஹாலிவுட்டில் பிரபல இயக்குநர்களும் இரட்டை சகோதரர்களுமான ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில்…

ரையான் கோஸ்லிங்-க்கு இணையான திறமைக்கொண்டவர் தனுஷ். எனவே எங்களுக்கு அவரை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க விருப்பம் இல்லை – ருஸ்ஸோ பிரதர்ஸ்

ஹாலிவுட்டில் பிரபல இயக்குநர்களும் இரட்டை சகோதரர்களுமான ருஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் சமீபத்தில் பிரபல ஓடிடி தளமான “நெட்பிலிக்ஸ்”-ல் வெளியான படம் தான் “தி கிரே மேன்”. ரையான் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுடன் தனுஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்து இருந்தார்.

இப்படம் “ தி கிரே மேன்” என்னும் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ஆக்‌ஷன் திரில்லர் விரும்பிகளுக்கு ஒரு விருந்தாக அமைந்தது. அதிலும் தனுஷ் தோன்றும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில் தான் அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “ தி கிரே மேன்” படத்தில் லீட் கேரக்டைரில் நடித்த ரையான் கோஸ்லிங்-க்கு இணையான திறமைக்கொண்டவர் தனுஷ் எனவே எங்களுக்கு அவரை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எங்களுக்கு விருப்பம் இல்லை எனக் கூறினர்.

மேலும், தனுஷ்க்கு என தனி கதையை உருவாக்க முடிவு செய்து இருப்பதாகவும், அக்கதையைக் கொண்டு அவரை தி கிரே மேன் கதைக்குள் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர். இதற்கிடையில் தனுஷ் தனது ட்விடர் பக்கத்தில் “ தி கிரே மேன்” பட்டதில் இடம்பெற்றுள்ள ஆடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.