சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக
சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில்
புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இக்கண்காட்சியை திரை பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் , பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் என தினமும் ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர் அந்த வகையில், இன்று கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அருமையான புகைப்பட கண்காட்சி. இதனை பார்வையிட வர வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு அழைத்துக் கொண்டே இருந்தார். படப்பிடிப்பிலிருந்ததால் வர இயலவில்லை. அதனால் தற்போது வந்துள்ளேன். சேகர்பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர், சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது எனத் தெரிவித்தார்.