வெளியானது ‘நிறங்கள் மூன்று’ திரைப்படத்தின் முதல் பாடல்!

‘நிறங்கள் மூன்று’ படத்தின் முதல் பாடலான ‘மேகம் போல் ஆகி’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’.  இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா…

‘நிறங்கள் மூன்று’ படத்தின் முதல் பாடலான ‘மேகம் போல் ஆகி’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நிறங்கள் மூன்று’.  இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடித்துள்ளார். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

இதையும் படியுங்கள்:  தென்னாப்பிரிக்க வழக்கை எதிர்கொள்ள தயார் – இஸ்ரேல் அறிவிப்பு!

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.  தயாரிப்பாளர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இத்திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  ஏற்கனவே இவர் இயக்கிய நரகாசூரன் படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யூ ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.  மேலும்,  இத்திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ‘மேகம் போல் ஆகி’ என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.  தாமரை எழுத்தில் உருவாகியுள்ள இந்த பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.