இன்று மாலை வெளியாகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்…!

நடிகர் சூரியா நடித்துள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் ‘பட்டாம்பூச்சி ’என்ற பாடல் இன்று மாலை 5:05 மணிக்கு வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூரியாவின் கருப்பு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சூரியா ‘விஸ்வநாத் & சன்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை ‘சித்தாரா எண்டெர்டயின்மண்ட்ஸ்’ தயாரித்துள்ளது. லக்கி பாஸ்கர், வாத்தி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இதில் மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ‘பட்டாம்பூச்சி’ என்ற பாடல் இன்று மாலை 5:05 மணிக்கு வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

நடிகர் சூரியாவின் கருப்பு படம் 400 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் அவரது அடுத்த படமான ‘விஸ்வநாத் & சன்ஸ்’-விற்க்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.