சசிகுமார் நடிக்கும் ‘ஃப்ரீடம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் Freedom படத்தின் First Look போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தாடி வச்ச ஹீரோக்களில் உருவாக வலம் வருபவர் நடிகர் சசிகுமார்.…

பிரபல நடிகர் சசிகுமார் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் Freedom படத்தின் First Look போஸ்டர் இப்பொது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தாடி வச்ச ஹீரோக்களில் உருவாக வலம் வருபவர் நடிகர் சசிகுமார். கிராமத்து கதைக்களம் கொண்ட படங்களை அதிகம் தேர்வு நடிக்கும் இவருக்கு ஏராளமான குடும்ப ரசிகர்கள் உள்ளனர். நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலு பட்டயகிளப்பி வரும் இவரது நடிப்பில் தற்போது புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது .

‘கழுகு’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த சத்ய சிவா இயக்கத்தில், தான் தற்போது சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் 1st லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது . அதன்படி இப்படத்திற்கு ‘FREEDOM’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடிக்க மேலும் இவர்களுடன் பல முன்னணி இளம் நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். எப்போதாவது ஒரு படம் பண்ணாலும் சிறப்பாக பணியாற்றி அதில் வெற்றி மட்டுமே கண்டு வரும் சசிகுமாருக்கு இந்த படம் வெற்றி படமாக அமையுமா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.