ஒரே ஃபிரேமில் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா – ‘ராயன்’ புதிய போஸ்டர் வெளியீடு!

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர் தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழு வெளியிட்டுள்ளது. தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.…

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் புதிய போஸ்டர் தமிழ் புத்தாண்டையொட்டி வாழ்த்து தெரிவித்து படக்குழு வெளியிட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’  திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனுஷின் 50வது படமாக உருவாகும் ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர்.

இதையும் படியுங்கள் : “எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?” – பாஜகவை கடுமையாக சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த திரைப்படம் வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி இருந்தது. பலரது கவனத்தையும் ஈர்த்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அடுத்த அப்டேட் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ‘ராயன்’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஃபிரேமில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதையடுத்து படத்தின் முதல் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

https://twitter.com/news7tamil/status/1779449067170333044

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.