இரு சக்கர வாகனத்துடன் தூக்கி எறியப்பட்ட தந்தை,மகன் – பதைபதைக்க வைக்கும் CCTV காட்சிகள்!

கோவை அருகே அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், கபடி போட்டிற்கு மகனை அழைத்துச்சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது…

கோவை அருகே அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், கபடி போட்டிற்கு மகனை அழைத்துச்சென்ற தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர்
உசேன் அவருக்கு வயது 38. இவரது மகன் அஜ்மல் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை அஜ்மல் கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தனது மகனை அழைத்துக் கொண்டு ஜாகிர் உசேன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அதேசமயம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் கார் ஒன்றில் வாளையார் அணையை சுற்றிப் பார்த்துவிட்டு, மற்றொரு பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் அதிவேகமாக வந்துள்ளனர். கார் எட்டிமடை அருகில் உள்ள கோழிப்பண்ணை அருகே வந்து கொண்டிருந்தபோது முன்னாள் சென்று கொண்டிருந்த காரை முந்த முயன்றுள்ளது.

அப்போது எதிரே தனியார் கல்லூரி நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஜாகிர் உசேன் மற்றும் அவரது மகன் அஜ்மல் இருவரும் இரு சக்கர வாகனத்தோடு தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் ஜாகிர் உசேன் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததை உறுதி செய்தனர். இதில் படுகாயம் அடைந்த அஜ்மல்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://twitter.com/Vnewstamil24/status/1672865971827273728?s=20

இந்த சம்பவம் தொடர்பாக கந்தப்பகவுண்டன் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காரில் பயணம் செய்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே அது வேகமாக சென்ற கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் இருசக்கர வாகனம் முன்னாள் சென்ற டெம்போ ட்ராவலர் வாகனத்தை முந்தி சென்றதும், எதிரே நடுரோட்டில் வந்து கொண்டிருந்த ஜூப்பை, கல்லூரி மாணவர்கள் அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் முந்தி செல்லும்போது விபத்து ஏற்பட்டதும் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த

விபத்தில் ஜாகிர் உசேன் ஓட்டிய இரு சக்கர வாகனம் சேதமடைந்ததோடு டெம்போ ட்ராவலர்-ன் முன் பக்கத்தில் கண்ணாடியை உடைத்து அந்தரத்தில் நிற்பது விபத்தின் கோரத்தை காட்டுவதாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.