“2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியே உறுதியாக வெற்றி பெறும்” – திருமாவளவன்!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,

“ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பா.ஜ.க. அரசு மதிக்காமல், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை தாண்டிச் செல்லும் வகையில் செயல்படுகிறது. இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மிக வலுவாக உள்ளது. இதுவரை வேறு எந்த எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்த கூட்டணியாக செயல்படுவதற்கான அறிகுறிகள் இல்லை. அதிமுக மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கலாம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி நீடிக்குமா என்பது தெரியவில்லை. அதேபோல் பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இன்னும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.

2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் என்பது உறுதி” என தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.