விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்.21-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை……!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் கடந்த 15 ஆம் தேதி மாசிப் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் படி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தோரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் மட்டுமின்றி கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொள்வர். மேலும் அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தோரோட்டத்தை காணவும் பக்தர்கள் வருகை தருவர்.

இந்த நிலையில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வருகின்ற 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை  அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.