கர்நாடகா மாநிலம் ஹெக்டே கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த தேவி நாராயண் முக்ரி என்பவரது வீட்டில் வெள்ளை மலைப் பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் கும்டாவின் ஹெக்டே கிராமத்தின் காந்தி நகரைச் சேர்ந்த தேவி நாராயண் முக்ரி என்பவரது வீட்டின் முற்றத்தில் செவ்வாய்கிழமை வெள்ளை மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டது. உடனடியாக வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டுக் காவலர் கணேஷ் முக்ரி மூலம் பாம்பு பிடி நிபுணர் பவன் நாயக்கைத் தொடர்பு கொண்டார். இரவு 12 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த பவன் நாயகா, மலைப்பாம்பை பத்திரமாக பிடித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த ஆண்டும் மிர்ஜானில் சிறிய வெள்ளை மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டதையடுத்து. பவன் நாயக்கா அதனை இரவோடு இரவாக சென்று மீட்டுள்ளார். இந்த வெள்ளை நிற மலைப்பாம்பின் வீடியோ, புகைப்படங்கள் எல்லா இடங்களிலும் வைரலானது. தற்போது ஹெகாட் பகுதியில் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை விட 3 மடங்கு பெரிய மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டதையடுத்து மக்கள் ஆர்வமுடன் அதனை பார்த்து சென்றனர்.
சருமத்திற்கு நிறம் கொடுக்கும் நிறமி சுரப்பி அதாவது மெலனின் இல்லாததால் வெண்மையாக காணப்படுகிறத்து. இது அல்பினோ பாம்புகள் என்றும் அழைக்கப்படுகிறது. ஆனால் அல்பினோ பாம்புகளில், கண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும். இதன் கண்கள் பாதி வெண்மையாகவும், மற்ற பாதி செம்பு நிறமாகவும் இருப்பதால், அல்பினோ பாம்புகளின் குழுவில் இதனை சேர்க்க முடியாது என பவன் நாயகா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் வெள்ளைப் பாம்பு பிடிபட்டது இது மூன்றாவது முறையாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய வெள்ளை மலைப்பாம்பு என மதிப்பிடப்பட்டுள்ளது. மீட்கப்பட்டு இரவு என்பதால் மலைப்பாம்பு குமாடா வனத்துறையினரிடம் காலை ஒப்படைக்கப்பட்டது. பாம்பு சிறு காயங்கள் ஏற்பட்டதால் மைசூர் உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.