முரசொலி அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வேலூர் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் நிலம் பஞசமி நிலம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் எல்.முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை சார்பி்ல் தொடரப்பட்ட குற்றவியல் அவதூறுவழக்கு சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தி்ல் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையை மூன்று மாதங்களில் முடிக்கவும் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.







