“எண்ணும் எழுத்தும் திட்டம்” 13ம் தேதி துவக்கம்

எண்ணும் எழுத்தும் திட்டத்தை வரும் 13-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.   தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்…

எண்ணும் எழுத்தும் திட்டத்தை வரும் 13-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.

 

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கோடை விடுமுறைக்குப் பின் வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளைச் செப்பனிட்டு, வர்ணம் பூசி தயார்ப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன் மாணவர்களை வரவேற்பதற்கும் பள்ளிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன.

 

பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறப்பையும், மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளையும் திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சியம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளார்.

அண்மைச் செய்தி: ‘“அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” – அமைச்சர் செந்தில் பாலாஜி காட்டம்’

அந்த பள்ளியிலேயே 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இழப்பைச் சரிசெய்யும் வகையிலும், அவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் “எண்ணும் எழுத்தும்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், கல்வித்துறை அதிகாரிகள், அமைச்சர் நாசர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து மாநிலம் முழுவதும் எண்ணும் எழுத்தும் திட்டம் அன்றைய தினமே செயல்பாட்டுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.