பயணியின் உயிரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய நடத்துனர்! – வைரலாகும் வீடியோ!

பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. கேரளாவில் பேருந்து படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக…

பேருந்து நடத்துனரின் துரிதத்தால் பயணி ஒருவரின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளாவில் பேருந்து படியில் நின்று பயணம் செய்த பயணி ஒருவர் திடீரென நிலைதடுமாறி தவறி விழும் போது நடத்துனர் அசால்டாக அவரை காப்பாற்றிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. நடத்துநர் பேருந்தின் பின்பக்க வாசலுக்கு அருகே நின்றுக் கொண்டு டிக்கெட் வழங்கி கொண்டிருந்தார். அப்போது வாசலுக்கு நேராக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பிரேக் போட்டதால் சட்டென நிலைகுலைந்த அந்த இளைஞர், கீழே விழப்போனார்.
ஆனால் அங்கு நின்று கொண்டிருந்த நடந்துநர் கண நேரத்தில் அந்த இளைஞரின் கையைப் பிடித்து உயிரைக் காப்பாற்றினார்.  நடத்துநர் மட்டும் இல்லையென்றால் அந்த இளைஞர் நிச்சயம் உயிரிழந்திருப்பார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
பலரும் அவரை ஸ்பைடர்மேன், கடவுள் என அழைத்து தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.  கேரளா பேருந்துகளின் படிக்கட்டுகளில் கதவுகள் பயணிகளின் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்ததும் அந்த இளைஞர் உயிர் பிழைக்க காரணமாக அமைந்துள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.