ஜோதிகா முன்னிலையில் நடிகர் சூர்யாவிடம் தான் கொடுத்த காதல் கடிதம் குறித்து நேர்காணல் ஒன்றில் நடன பயிற்சியாளர் பாப்பி மனம் திறந்துள்ளார்.
தனது கடின உழைப்பால் தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த நாயகனாக உயர்ந்து நிற்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் 1999ம் ஆண்டு வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் முதன் முறையாக சேர்ந்து நடித்திருந்தனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்களின் போது காதல் மலர்ந்தது.
நடிகர் சூர்யா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தில் நடன இயக்குனராக பாப்பி பணியாற்றியிருந்தார். இந்த படத்தில் என்னைக் கொஞ்சம் மாற்றி என்ற பாடலின் போது நடிகர் சூர்யா மீது பாப்பி காதல் வயப்பட்டிருக்கிறார். இந்த பாடலில் அதிகப்படியான நடனங்கள் இடம்பெற்றிருக்காது. ஜீப் ஓட்டுவது மற்றும் குறைந்த நடனமே இடம்பெற்றிருக்கும். இந்த நேரங்களில்தான் சூர்யாவுடனான இவரது காதல் விரிவடைந்துள்ளது.
சிறுவயது முதலே சூர்யாவால் அதிகம் ஈர்க்கப்பட்ட இவருக்கு காக்க காக்க திரைப்படத்தில் அந்த ஈர்ப்பு மேலும் அதிகரித்தது. இது குறித்து சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பாப்பி கூறியதாவது, காக்க காக்க திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் காதல் கடிதம் ஒன்றை எழுதி சூர்யாவுக்கும் கொடுத்தேன். இதனை கண்டு அதிர்ந்த சூர்யா தான் ஏற்கனவே ஜோதிகாவை காதலிப்பதாக தெரிவித்ததார்.
சூர்யா ஜோதிகாவுடன் பேசிக்கொண்டிருந்த போது நான் சூர்யாவை காதலிக்கிறேன் என்றேன். இதை கேட்ட ஜோதிகா, என்ன பாப்பி இத கொஞ்சம் முன்னாடியே சொல்லிருக்கக்கூடாதா என கிண்டலாக சொன்னார்.
https://twitter.com/SuriyaFansTeam/status/1485760794692587522
உடனே இப்பவும் ஒன்னும் பிரச்சன இல்ல நா அவர லவ் பண்றேன், நா அவர் கூட இருந்துக்குறேன்னு சொன்னதும் ஜோதிகா, சாரி நீங்க ரொம்ப லேட்டா சொல்றீங்க அப்படின்னு சொன்னாங்க. உடனே சூர்யா, நாம நல்ல பிரண்ட்ஸ்னு சொல்லி கை கொடுத்தார். இப்பவும் எங்க நட்பு தொடருது. இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.









