உணவகத்தில் உணவை கொட்டி வீணாக்கிய குழந்தையை தடுக்காத பெற்றோர்கள் குறித்த சம்பவம் மீது கடுமையான விமர்சனத்தை இணையவாசிகள் வைத்துள்ளனர்.
ஒருபுறம் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் நிறைய குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், மறுபுறம் இலை முழுவதும் கலர் கலராக உணவு பதார்த்தங்களை அடுக்கிவிட்டு, பாதியிலே சாப்பிடமுடியாமல் வீணாக்குகின்ற நபர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதற்கான காரணம் உணவைச் சரியான அளவில் பயன்படுத்த குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தாத பெற்றோர்கள் தான்.
இதனை மீண்டும் நினைவூட்டும் விதமாக Reddit இணையதளத்தில் பகிரப்பட்டிருந்த ஒரு பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. Reddit இணையதளத்தில் Cruiseman_80 என்ற பயனர் பகிர்ந்திருந்த அந்த பதிவில்,ஒரு உணவகத்திற்கு குடும்பத்துடன் வந்திருந்த ஒரு குழந்தை உணவு சாப்பிடும் போது தான் அமர்ந்திருந்த இருக்கையை சுற்றிலும் உணவை சிதறவிட்டு விளையாடி உள்ளது. இதனை கண்டுகொள்ளாத அந்த பெற்றோர்கள். அங்கு வேலை செய்பவர் சுத்தம் செய்து விடுவார் என்ற எண்ணத்தோடு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்த புகை படத்தை பகிர்ந்திருந்த அந்த பயனர் இடுகையின் தலைப்பில் “இது இப்போது சரியா? உள்ளூர் பப்பில் உள்ள ஒரு குடும்பம், தங்கள் குழந்தையை எல்லா இடங்களிலும் உணவை வீச அனுமதித்துள்ளதோடு, அவர்களைத் தடுக்க எந்த முயற்சியும் செய்யவில்லை, பின்னர் அதை சுத்தம் செய்ய ஊழியர்களிடம் விட்டுவிட்டு சென்று விட்டார்கள்”.எனக்கூறி மேஜையுடன் கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . சாப்பிட்டுத் தூக்கி எறிந்த மிச்சத்தையே விருந்தாக நினைத்துக் காத்திருப்போர் இருக்கும் இந்த உலகில் இப்படியும் பல சம்பவங்கள் நடப்பதை எண்ணி பலரும் அந்த குடும்பத்தினரை தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Is this OK now? Family at local pub let their kid fling food all over the place and made zero attempt to stop them, then left it for staff to clean up.
byu/cruiserman_80 inaustralia
- பி.ஜேம்ஸ் லிசா







