தமிழகத்தில் தங்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவே பெரிய கட்சி என்பதால், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே தீர்மானிக்கும் என்றார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கும் நிலையில், கே.பி.முனுசாமியின் கருத்தை தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் சி.டி.ரவி தெரிவித்தார்.







