குடியரசு தலைவர், பிரதமரை இன்று சந்திக்கிறார் முதலமைச்சர்

குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். நேற்று இரவு 9…

குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். நேற்று இரவு 9 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் அங்குள்ள தமிழ்நாடு இல்லத்தில் இரவு தங்கினார்.

இன்று காலை 10.30 மணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். தொடர்ந்து 11.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கிறார்.

தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்துக்கு வரவேண்டிய நிலுவைத் தொகைகள், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிப்பது, மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம், நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் இருக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாகவும், தமிழகத்துக்கு தேவையான புதிய திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.